வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்
அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பல அரச நிறுவனங்களின் அத்தியாவசியப் பணிகளுக்காக சில வாகனங்களை மாத்திரம் கொண்டு வருவதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்
கல்வி அமைச்சுக்கு 2 பேருந்துகளும், சுகாதார அமைச்சுக்கு 21 வண்டிகளும், நடமாடும் மகப்பேறு கிளினிக்கிற்கு 3 வாகனங்களும், தொழிலாளர் அமைச்சுக்கு 1 வாகனமும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 3 பயணிகள் பேருந்து மாத்திரமே இதன் மூலம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவை அனைத்தும் வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
