வாகன விபத்திற்கான இழப்பீடு: புதிய நடவடிக்கை குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன்படி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் இழப்பீடுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் குறித்த சட்ட கட்டமைப்பை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பில் தேவையான விதிமுறைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய முறையின் மூலம் கார் விபத்தில் சிக்கிய தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே ரூ.500,000 வரை இழப்பீடு பெற முடியும்.
போதுமான இழப்பீடு பெறும் வாய்ப்பு
விபத்தின் தன்மைக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு 500,000 போதாது என்றால், பின்னர் நீதிமன்றத்திற்குச் சென்று போதுமான இழப்பீடு பெற வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்.
வாகன விபத்துக்களில் ஈடுபடும் நபர்கள் காப்புறுதி முகவர் நிலையங்கள் மூலம் இழப்பீடு பெறுவது கடினமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |