மரக்கறி வர்த்தக சர்ச்சை! குடும்பஸ்தர் படுகொலை - பொலிஸாரால் இருவர் கைது
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரக்கெட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரக்கட்டிய, வேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மரக்கறி வியாபாரம் தொடர்பில் இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குறித்த நபரைத் தாக்கியுள்ளார் என்று தெரியவருகின்றது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தம்பான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரமணடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இருவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ள நிலையில், குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.