வெடுக்குநாறிமலை விவகாரம்: பூசகர் உள்ளிட்ட 8 பேரிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Tamils Vavuniya M. A. Sumanthiran Selvarajah Kajendren
By Thulsi Mar 12, 2024 11:46 AM GMT
Report

புதிய இணைப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்திருந்தனர்.

அவர்களை கடந்த 9ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12.03.2024) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை

இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

வெடுக்குநாறிமலை விவகாரம்: பூசகர் உள்ளிட்ட 8 பேரிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Vedukunarimalai Adi Shiva Temple Court Case

காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

வெடுக்குநாறிமலை விவகாரம்: பூசகர் உள்ளிட்ட 8 பேரிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Vedukunarimalai Adi Shiva Temple Court Case

இதனையடுத்து, குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், தி.அருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

வவுனியா - வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  

ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றில் இன்று வழக்கு இடம்பெற்றுவருகின்றது.

வவுனியா நீதவான் நீதிமன்றம்

கடந்த 08 ஆம் திகதி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை விவகாரம்: பூசகர் உள்ளிட்ட 8 பேரிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Vedukunarimalai Adi Shiva Temple Court Case

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த 9 ஆம் திகதி மாலை முன்னிலைப்படுத்தினர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.  

வழக்கு மீதான விசாரணை

வெடுக்குநாறிமலை விவகாரம்: பூசகர் உள்ளிட்ட 8 பேரிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Vedukunarimalai Adi Shiva Temple Court Case

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

மேலும் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும் நீதிமன்றுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US