வெடுக்குநாறி ஆலயத்திற்கான தீர்வை மக்கள் எழுச்சி மூலமே நீதியை நிலைநாட்ட முடியும்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மக்கள் எழுச்சி மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வவுனியா நீதிமன்றத்தில் நேற்று (12.03.2024 ) இடம்பெற்ற வெடுக்குநாறி ஆலய வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துமீறல்கள்
மேலும் தெரிவிக்கையில், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆலயத்தில் பொலிஸாரால் அராஜகமாக கைது செய்யப்பட்ட பூசகர் உட்பட 8 பேரினதும் வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும், 19ஆம் திகதிக்கு வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது.
எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கை மிகவும் பொய்யான விதத்தில் வழங்கப்பட்டு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களை விட அங்கிருக்க கூடிய தொல்பொருள் திணைக்களத்தினர் தான் பலவித அத்துமீறல்களை செய்கின்றனர்.
கைவிலங்குடன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் எமது உறவுகள் 8 பேரும் ஒழுங்கான உணவின்றி மிகவும் வேதனையாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், ஈழத்தமிழினமாக மக்கள் எழுச்சிப் போராட்டத்தை வடக்கு, கிழக்கு தழுவி வவுனியாவில் போராட்டத்தை நடத்த வேண்டும்.
போராட்டம்
மக்கள் எழுச்சி தான் இலக்குகளை அடையவும் நீதியை நிலை நாட்டவும் செய்யும். சிவராத்திரி தினத்தன்று கூட ஒவ்வொரு போராட்டமாக தான் அந்த நிகழ்வை செய்ய முடிந்தது.
போராட்டம் மூலமே இலக்கை அடைய முடியும். அந்தவகையில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தமிழ் தேசியப்பற்றாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
