வட கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம்!எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்(Photos)
வடக்கு கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டாக தீர்மானம்
கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை
கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர்
ந.சிறிகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா
(வேந்தன்), மத குருமார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள்
கலந்து கொண்டனர்.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
