வடமாகாண பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் (Photos)
வடமாகாண ரீதியில் இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று பளுதூக்கும் போட்டி இடம்பெற்றுள்ளது.
பெண்கள் பிரிவு
பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த தி.கோசியா 45 kg எடைப்பிரிவில் 71kg தூக்கி 3ஆம் இடத்தையும், கு.குழவிழி 59kg எடைப்பிரிவில் 83kg தூக்கி 2ஆம் இடத்தையும், பா.செரோண்யா 71kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவு
அதேபோல் ஆண்கள் பிரிவில் சிவரூபன் 81kg எடைப்பிரிவில் 116kg தூக்கி 3ஆம் இடத்தையும், டில்ஷான் 67kg எடைப்பிரிவில் 105kg தூக்கி 3ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இப்போட்டியில், வடமாகாண ரீதியில் வெற்றிபெற்று வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர், ஞா.ஜீவன் அவர்களுக்கும் வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளு
தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும்
குறிப்பிடத்தக்கது.




உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
