வவுனியாவில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு களமிறங்கிய இராணுவத்தினர்
வவுனியா நகரப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரின் பிரதான சந்திகள், உள் வீதிகளின் சந்திகள் என்பவற்றில் விசேட கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதிகளில் செல்லும் மக்களை மறித்து பயணத் தடையை மீறி நடமாடி வருபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேவேளை நகரின் சில பகுதிகளில் இராணுவத்தினருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தேவையற்ற வகையில் பயணத்தடையை மீறி நகரில் நடமாடுவோரை வழிமறித்து அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




