வவுனியா போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு
வவுனியா போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் உதவி சாலை முகாமையாளரை இடமாற்றம் செய்தமைக்கு எதிராக வவுனியா போக்குவரத்து சபையின் சாரதிகள், காப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர்கள்,
எந்தவித பிழையோ அல்லது காரணமோ இல்லாமல் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சாலை முகாமையாளரிடம் கேட்டபோது, தொழிலாளர்கள் சொல்லியே அவரை தூக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
நாம் அவ்வாறு எதனையும் சொல்லவில்லை. தற்போதைய சாலையின் முகாமையாளர் ஏற்கனவே இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர்.
எனவே இவர் இங்கு தொடர்ந்து பணிபுரிந்தால் ஒவ்வொரு தொழிலாளர்களையும் பழிவாங்கிக் கொண்டே இருப்பார்.
அவர் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் சிங்கள மொழியில் பேசுகிறார். எனவே அவர் இங்கிருந்து வெளியேறினால் இந்த நிமிடமே நாம் பணி செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
எமது சாலையில் பணமே இல்லை, பேருந்துகளுக்கு டீசல் அடிப்பதற்குக் கூட பணம் இல்லாத நிலைமை நீடித்துள்ளது.
சரியான நிர்வாகமும், முகாமைத்துவமும் இல்லாமையே இதற்குக் காரணம். இப்போது இருப்பவருக்கு நிர்வாகமே தெரியாது.
இந்த விடயங்கள் ஊழியர்களான எங்களையே பாதிக்கின்றது. எனவே இடமாற்றம் செய்யப்பட்ட உதவி சாலை முகாமையாளரின் இடமாற்றத்தை ரத்து செய்து தற்போது இருக்கும் முகாமையாளரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு காரணமாகப் பயணிகளும் அசௌகரியங்களைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri