கல்விச்சுற்றுலாவில் பாரபட்சம் காட்டிய ஆசிரியர் : வாயில் துணியோடு போராட்டத்தில் இறங்கிய மாணவன்
வவுனியா - பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவன் ஒருவர் தன்னை பள்ளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாமைக்கு நீதி கோரி வலயக் கல்வி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பள்ளிச் சுற்றுலா செல்ல பணமும் பெயரும் கொடுத்த தன்னை நிறுத்திவிட்டு ஏனைய மாணவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளதாக அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.
கவலையடைந்த மாணவன்
குறித்த பாடசாலையால் இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே 1500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்று காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த மாணவன் பாடசாலைக்கு சமூமளிக்காமையால் சுற்றுலாச் செல்லும் மாணவர்களின் பட்டியலில் இருந்து மாணவனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைக்கு வராத மற்றுமொரு மாணவியை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.
இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
