வவுனியா - சகாயமாதாபுரம் விடுவிப்பு
கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து முடக்கப்பட்டிருந்த வவுனியா, சகாயமாதாபுரம் கிராமம் இன்று விடுவிக்கப்பட்டது.
வவுனியா, சகாயமாதாபுரம் கிராமத்தில் அதிக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும், கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் சகாயமாதாபுரம் கிராமம் இம் மாதம் 5 ஆம் திகதி கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.
குறித்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், கோவிட் பரவலை தடுக்கும் முகமாக பயணத்தடை விதிக்கப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டிருந்த குறித்த கிராமத்தின் அச்ச நிலை குறைவடைந்த பின்னர் 22 நாட்களின் பின் குறித்த கிராமம் விடுவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.









அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
