உக்ரைன் - ரஷ்ய போர் தொடர்பில் முதல் தடவையாக இந்தியர் ஒருவர் கைது!
உக்ரைன் - ரஷ்ய போரில் ரஷ்ய இராணுவத்திற்காக பணிபுரிந்த இந்தியர் உக்ரைனிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஹில் மஜோகி என்ற 22 வயதுடைய குறித்த இளைஞர், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
ரஷ்ய படைகளின் ஒரு அங்கமாக போரில் ஈடுபட்டதற்காக உக்ரைனிய படைகளால் அவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக ஒரு இந்தியர் சிறைபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இரண்டு வருடங்களுக்கு முன்னர், கணினிப் பொறியியல் கல்விக்காக ரஷ்யா சென்ற மஜோகி, அங்கு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அவர் பகுதிநேர அடிப்படையில் டெலிவரி வேலை செய்துகொண்டிருந்த போது, அவர் கொண்டு சென்ற பார்சலில் போதைப்பொருள் இருந்துள்ளது.
அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்தால் சம்பளத்துடன் கூடிய விடுதலை வழங்குவதாக ரஷ்ய அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததாக சஹில் மஜோகி தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம்
இதன்படி, ஒரு ஆண்டு ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிய அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி ரஷ்ய இராணுவத் தளபதியுடன் முரண்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து தப்பித்து உக்ரைன் இராணுவ பதுங்குகுழியில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri