வவுனியா பூந்தோட்டம் - பெரியார்குளம் வீதி புனரமைப்பு ஆரம்பம்
வவுனியா, பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இருந்து பெரியார்குளம் முருகன் ஆலயம் வரையான 1200 மீற்றர் நீளம் கொண்ட வீதிக்கு காப்பற் இடும் பணிகள் இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வீதிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக அண்ணளவாக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீதி அமைக்கும் பணி
வவுனியா மாநகர சபையின் வட்டார உறுப்பினர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் ஒழுங்குபடுத்தலில் இவ் வீதி புனரமைக்கப்படுகின்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வீதி அமைக்கும் பணியை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் சி.கிருஸ்ணதாஸ், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் பிரேமரஞ்சன், கிராமத்தின் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan