வர்த்தக நிலையங்களில் வவுனியா பொலிசார் திடீர் சோதனை
சுகாதார நடைமுறைகள் குறித்து வவுனியா நகரையண்டிய பகுதிகளில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், வவுனியா புகையிரத நிலைய வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார் முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் பணிபுரிந்தோர், முகக்கவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.
இதன்படி 10 வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுமாறும் பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
