தண்டப்பணம் விதிப்பால் மேலதிக பாகங்களை உடைத்து வீசிய சாரதி
வவுனியாவில்(Vavuniya) க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த அவர், தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (07) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா
இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கியிருந்தனர்.
அந்தவகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் கிளீன் சிறீலங்கா திட்டத்தினை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, அப்பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்த பொலிஸார் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்துடன், தண்ட குற்றப் பத்திரத்தையும் வழங்கியிருந்தனர்.
சாரதியின் செயற்பாடு
இதனால் அதிருப்தி அடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரின் முன்னிலையிலேயே குறித்த உதிரிப்பாகங்களை காலால் அடித்து உடைத்திருந்ததுடன், ஏனைய பாகங்களையும் கழற்றி வீசியுள்ளார்.
சாரதியின் செயற்பாட்டை வேடிக்கை பார்த்த பொலிசார் அமைதியாக அங்கிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/62103d86-275e-4b9d-b647-b7360759c904/25-67a65bf5f39ca.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/72113a95-4fab-4c9c-875c-448034591341/25-67a65bf684548.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d5e14e0f-1e10-4329-866e-463445a09a6c/25-67a65bf7177c8.webp)
![பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/e2e1cc8b-1a0a-4a48-9f21-b58e2287b57c/25-67a5ed0769138-sm.webp)
பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா?](https://cdn.ibcstack.com/article/87592ec4-9db7-4b06-a590-3e55b177619b/25-67a59318638c0-sm.webp)