சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை
வவுனியா - சூசைப்பிள்ளையார் குளம் மற்றும் சகாயாமாதாபுரம் பகுதியில் சுகாதாரப்பிரிவினரால் இன்று (22) எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, சகாயாமாதபுரம் வைரவர் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவிட் தாக்கம் காரணமாக மரணமடைந்துள்ளதுடன், 07 பேர் தொற்றாளர்களாக அப்பகுதியில் நேற்று (21.06) இனங்காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் அதிகரித்து வரும் கோவிட் பரப்பலைக் கட்டுப்படுத்தும் முகமாக சூசைப்பிள்ளையார்குளம் மற்றும் சகாயாமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் தாக்கம் காரணமாக சகாயாமாதாபுரம் மற்றும் வைரவ கோவிலடிப் பகுதிகளில் முற்றாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் வீதியில் நின்றோர் மற்றும் வீடுகளிலிருந்தோர் என 55 பேருக்கு இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri