வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல்
புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் 5000 ரூபா விசேட நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் மூன்றாவது நாளாக இன்றும் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
கோவிட் காரணமாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக புத்தாண்டை முன்னிட்டு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
வவுனியா பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 900 குடும்பங்கள் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றுள்ள நிலையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மூன்றாவது நாளாக வழங்கி வைக்கப்பட்டது.
பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோர், அங்கவீன கொடுப்பனவைப் பெறுவோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் எனத் தெரிவு செய்யப்பட்ட 900 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கல் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பண்டாரிக்குளம் சமுர்த்தி
அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்னேஸ்வரன் தலைமையில் பண்டாரிகுளம்
கிராம சேவையாளர் சுபாஸ் பவித்திரா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்
மதனசாந்தி ஆகியோர் மூலம் வழங்கி வழங்கப்பட்டது.












