வவுனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஒருவர் படுகாயம்
வவுனியா - ஓமந்தை(Vavuniya) பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஓமந்தை - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் வைத்தே இன்று(06.04.2024) விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
கடுமையான சேதம்
அநுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயனித்த தொடருந்தானது ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடவையினை கடக்கமுற்பட்ட கெப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் கெப் ரக வாகனம் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் தொடருந்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு மற்றொரு தொடருந்தில் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
