வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த குழு நியமனம்
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் இன்று (21.03) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
பெற்றோர்களால் முறைப்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம்.
கல்வி அமைச்சினால் கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
