கனகராயன்குளம் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக கவலை தெரிவிப்பு
வவுனியா- கனகராயன்குளம் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். தணிகாசலம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கனகராயன்குளத்தில் வாழும் மக்களின் நலன்கருதி கிராமிய வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்ட போதிலும் அதனை திறப்பதில் காலதாமதமாகி அண்மையில் திறக்கப்பட்டது.
எனினும் வைத்தியர் ஒருவருடன் உதவியாளர் நியமிக்கப்பட்ட போதிலும் குறித்த வைத்தியசாலைக்கு அதிகளவான நோயாளர்கள் வருகின்றமையால் வைத்தியசாலையை இயக்குவதற்கு ஆளணி தேவை அதிகரித்துள்ளது.
ஆளணி நிரப்பப்படும் பட்சத்தில் நோயாளர்கள் சிரமமின்றி தமது நோய்க்காக மருந்தினை பெறுவதுடன் நேர விரயமும் ஏற்படாது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
