வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்! பிரேத பரிசோதனை முடிவு வெளியானது - செய்திகளின் தொகுப்பு
வவுனியா - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் மரணம் நீரில் மூழ்கி மூச்சு திணறலால் ஏற்பட்டது என பிரதே பரிசோதனை முடிவு தெரிவிக்கிறது.
கணேசபுரம் பகுதியிலுள்ள பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து கடந்த 30ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் 16 வயதுடைய சிறுமி யதுர்சி சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவிக்கையில், சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளதுடன், சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan