வவுனியாவில் மதுபோதையில் இருந்த இளைஞர்களின் அட்டகாசம்
வவுனியாவில் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் மதுபோதையில் இருந்த இளைஞர்களை உள்ளடக்கிய ரவுடிகள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை வர்த்தக நிலையத்தினுள் வெடிக்கச் செய்துள்ளனர்.
இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர் வாடிக்கையாளர்கள் நிற்பதால் எதனையும் செய்துவிடாதீர்கள் என கும்பிட்ட போதிலும், அவர்கள் பட்டாசுகளை கொழுத்தியதால் மக்கள் நாலா திசைக்கும் பதறி ஓடியுள்ளனர்.
பட்டாசு வெடித்தமையால் கடையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முன் பகுதி சேதமடைந்துள்ளது.
வவுனியா பொலிஸில் முறைப்பாடு
இச்சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா
பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.