தமிழர் பகுதியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.
விஷேட தொலைபேசி இலக்கம்
வவுனியாவில் பரவிவரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை மற்றும்
குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாக
கட்டுப்படுத்தவே விஷேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு ஓமந்தை, புளியங்குளம்,
நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள்,
போதைப்பொருள் தொடர்பான அறிவித்தல்களை வழங்கவே பின்வரும் விஷேட தொலைபேசி
இலக்கங்களும்
0718592379, 0702356404 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 22 நிமிடங்கள் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
