வவுனியாவில் ஆயிரத்தை கடந்த கோவிட் தொற்றாளர்கள்
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பித்த கோவிட் வைரஸ் தொற்று வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் அதன் தாக்கத்தை செலுத்தியிருந்தது.
அந்தவகையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் 1040 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அநேகமானவர்கள் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
