வவுனியாவில் திடீர் சோதனை நடவடிக்கை : மக்களுக்கு கடும் எச்சரிக்கை
வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து இன்றைய தினம் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியாவில் அமைந்துள்ள வங்கி, மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் மருத்துவ நிலையங்கள், மற்றும் உணவகங்களில் இன்று (16) காலை முதல் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முக கவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியர்கள் அரங்கன் மற்றும் பிரசன்னா தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், பொலிஸார், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










