வவுனியா - பண்டாரிகுளம் பிரதான வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு
வவுனியா(Vavuniya) - பண்டாரிகுளம் பிரதான வீதி புனரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று(26.06.2024) இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாத குறித்த வீதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச காலத்தில் புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இடம்பெற்று இருந்த போதிலும், குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தன.
வீதி புனரமைப்பு பணி
இந்நிலையில், வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் 30.3 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த வீதி காபர்ட் வீதியாக 1.9 கிலோ மீற்றர் தூரத்திற்கு புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் குறித்த வீதி செப்பனிடப்படாமல் தொடர்பில் பொது மக்கள் விமர்சனம் செய்து வந்த நிலையிலேயே இந்த பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.