வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை (Photos)
வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதி, பண்டாரிக்குளம் - தவசிகுளம் பிரதான
வீதி, பண்டாரிக்குளம் - வேப்பங்குளம் பிரதான வீதி என்பவற்றை புனரமைப்பதற்கான
கோரிக்கைகள் பல காலமாக முன்வைக்கப்பட்டிருந்தது.
புனரமைப்பு பணி
இதனடிப்படையில் கொழும்பில் இருந்து வருகை தந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் உள்ளடங்கிய குழுவினர், கிராம மட்ட அமைப்புக்களுடன் குறித்த வீதியை இன்று பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் புனரமைப்பு செய்யப்பட வேண்டிய வீதிகளுக்கான அளவீடுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த வீதியின் புனரமைப்பு பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கு.திலீபன் குறிப்பிட்டுள்ளார்.







Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
