வவுனியாவில் பிடிபட்ட நெடுநாள் கொள்ளையர்கள்: கார் தொடர்பில் வலுக்கும் சந்தேகம் - செய்திகளின் தொகுப்பு
வவுனியாவின் வெவ்வேறு இடங்களில் வீதியில் பொது மக்களை வழிமறித்து நகைகளை திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களும் வீதிகளில் செல்வோரிடம் சங்கிலி அறுப்புச் சம்பவங்களும் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்களால் கடந்த 6 மாதங்களாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குற்றச்செயலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர பிரதான செய்திகள்.