வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்!!
வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டம் பகுதியிலிருந்து நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு முச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் உட்பட அதில் பயணம் செய்த இரு பெண்கள் என 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் குறித்த பிரதான வீதியில் அண்மைய நாட்களாக விபத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam