வவுனியா திருடன் வட்டுக்கோட்டையில் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் வவுனியாவை சேர்ந்தவர்.
திருட்டு
அவர் சுழிபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருந்தபோதே இவ்வாறு தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மூன்று தொலைபேசிகள் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை

குறித்த சந்தேகநபர் இரண்டு தடவைகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்டவர் என்பதுடன் மூன்றாவது தடவை இரண்டு வருடகால சிறைத்தண்டனை பெற்று வந்தநிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் சிறையில் இருந்து தப்பித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நாளைய தினம் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam