வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களை பூர்த்திசெய்ய அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று(13.05.2026) பிரதேச செயலாளரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள்,பாடசாலைகளின் புனரமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான தயாரிப்பு
மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டு பகுதிகள் காணப்படுவதாகவும், அவற்றில் ஆயித்தியமலை பொலிஸார் சட்டவிரோத மதுபான தயாரிப்பை கட்டுப்படுத்த ஓரளவு சிறப்பாக செயற்படுகின்ற போதிலும் வவுணதீவு பொலிஸாரின் செயற்பாடுகள் கடும் மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனால் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சட்டவிரோத மதுபானம் கொண்டு சென்று வியாபாரம் செய்யுமளவுக்கு அதன் உற்பத்தி வவுணதீவில் கொடிகட்டிப்பறப்பதாகவும், இது தொடர்பில் பலமுறை தெரியப்படுத்தியும் பொலிஸார் முறையாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்காவிட்டால் பொதுமக்களினால் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த சட்டவிரோத மதுபானம் உற்பத்தியை தடுப்பதற்கு பொலிஸாரினை விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவிறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற யானை மனித மோதல்களை தடுக்கும் வகையில் பிரதேச செயலக ரீதியாக கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் யானைவேலிகளை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த பிரதேசத்திற்கு மாத்திரம் 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கான நிவாரணங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக நீண்ட காலமாக மக்களின் தேவையாக இருந்த வீட்டுத்திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 10 வருடத்திற்கும் மேலாக இவர்கள் இந்த வீட்டுத்திட்டத்திற்கு என நிதியினை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

சஜித் பிரேமதாச அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட இந்த மாதிரி வீட்டுத்திட்டம் அவரது காலத்திற்கு பின்னர் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் யாருமே எங்கள் மக்களை கண் கொண்டு பார்க்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் 10 வருடத்திற்கு பின்னர் இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதிகளை நாங்கள் ஒதுக்கியுள்ளது.
வவுணதீவு பிரதேசத்திலே அதிகமான வீட்டுத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இடைநடுவே கைவிடப்பட்டிருந்தது. அதற்காகக் கூட இந்த முறை நாங்கள் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
அதேபோன்று, டிட்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதில் அவர்களது வீட்டு பாதிப்புக்கான நிதிகளையும் வழங்கியிருக்கின்றோம். தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் கூட நிதி ஒதுக்கீடுகளை வழங்கியிருக்கின்றோம். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாங்கள் அனைத்து பிரதேசங்களிலும் தங்களது மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக முன்முனைப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan