வவுனியாவில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதி விபத்து! சாரதி படுகாயம் (video)
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (04) மாத்தளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ9 வீதியில் சென்ற கார் மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோவிலுக்கு சமீபமாக வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் அமர்ந்திருந்த மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த சிங்காரவேல் சண்முகதாசன் வயது 58 என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி, சேதமடைந்த முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பன வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








