முத்து சப்பை இரதத்தில் வீதியுலா வந்த பேச்சியம்பாள்
அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா நேற்றையதினம் (22.03.2024) வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
விசேட பூஜை
பின்னர் பேச்சியம்மாள் முத்துச் சப்பை இரதத்தில் ஏறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து நாத சங்கமம் இசைக் கச்சேரியும் இடம்பெற்றது.
அத்துடன், கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்ததோடு பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
