திருத்தந்தை பிரான்சிஸின் திருவுடல் குறித்து வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நித்திய இளைப்பாறிய பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் (Pope Francis) தேகம் வைக்கப்பட்டுள்ள திருவுடல் பேழை, இன்று மூடப்பட்டு முத்திரையிடப்படும் என வத்திக்கான் (Vatican) திருஅவை அறிவித்துள்ளது.
வத்திக்கான் திருஅவையின் தலைவராக செயற்படுகின்ற கர்தினால் கெவின் ஃபாரல் தலைமையில் இன்று (25) மாலை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நாளை தேசிய துக்கதினம்
இதில் நூற்றுக்கணக்கான கர்தினால்களும், புனிதத்துவம் பெற்ற அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் திருவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலம் நிறைவுக்கு வரவுள்ளது.
நாளையதினம் (26) அவரது இறுதி நல்லடக்க ஆராதனை நடைபெறவுள்ளது.
இதுவரையில் இலட்சக்கணக்கான மக்கள் திருத்தந்தை பிரான்சிஸின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு, இலங்கையில் நாளை (26) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |