நிதி நிறுவனங்களின் வரி அறவிட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் - ஜூலை 01ஆம் திகதி முதல் நடைமுறை
எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர விளக்கம் கொடுத்துள்ளார்.
பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது,
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, வரிக் கொள்கையை எளிமைப்படுத்தும் நோக்கில், இதுவரை காலமும் அறவிடப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பில் நிதி நிறுவனங்களுக்கான அறிவிப்பு
இதன்படி, இதுவரை காலமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட்ட 18% பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியன எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியுடன் (VAT) இணைக்கப்பட்டு 20.5% சதவீதமாக அறவிடப்படும்.

இருப்பினும், அந்த மாதத்திலிருந்து சமூக பாதுகாப்பு வரி அறவிடப்பட மாட்டாது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இனிவரும் காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு வரி என இரண்டு வகை வரிகள் தனித்தனியாக அறவிடப்படமாட்டாது என உறுதியளித்துள்ளார்.
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri