ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை! வாசுதேவ நாணயக்கார
தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்த பின் தற்போது பொது மக்களின் எதிரியாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானங்களை விமர்சித்துள்ள வாசுதேவ

இலங்கை, தற்போது எதிர்பார்த்திருக்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானங்களை வாசுதேவ நாணயக்கார விமர்சித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சமூகத்திலும் அவர்களின் வாழ்க்கைச் செலவுகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திய போதிலும், நாட்டின் நிலைமை சிறப்பாக இருப்பதாக ஜனாதிபதி தொடர்ந்தும் கூறினால், அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri