ட்ரம்பிற்கு எதிராக வாசுதேவ நாணயக்கார போர்க்கொடி
வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியைக் கடத்திச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசப்பற்றுள்ள வெனிசுவேலா மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்காக வீதியில் இறங்குவார்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"வெனிசுலாவிலுள்ள எண்ணெய் வளத்துக்கு ஆசைப்பட்டே ட்ரம்ப் கல் யுகத்தில் செயற்படுவது போல் செயற்பட்டுள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக நாம் போராட்டம் நடத்துவோம்.
இடதுசாரி சக்திகளுடன் இணைந்து இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.