திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வசந்த முதலிகே-செய்திகளின் தொகுப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகே கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
