வசந்த முதலிகே உள்ளிட்டோர் பிணையில் விடுதலை
கல்வி அமைச்சினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் கடந்த 23 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை திறக்குமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு கல்வி அமைச்சுக்கு சென்றிருந்தனர்.
அதனையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(27.02.2023) மீண்டும் கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
