மோடியால் திறந்து வைக்கப்பட்ட வந்தாரா வனவிலங்கு மீட்பு மையம்
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையால் ஞாயிற்றுக்கிழமை ஜாம்நகரில் நிறுவப்பட்ட வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமான வந்தாராவை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில், மோடியின் எக்ஸ் தளத்தில் குறித்த பயணத்தின் காணொளி மற்றும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது ஒரு தனித்துவமான வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சியாகும் என மோடி மேலும் கூறியுள்ளார்.
Inaugurated Vantara, a unique wildlife conservation, rescue and rehabilitation initiative, which provides a safe haven for animals while promoting ecological sustainability and wildlife welfare. I commend Anant Ambani and his entire team for this very compassionate effort. pic.twitter.com/NeNjy5LnkO
— Narendra Modi (@narendramodi) March 4, 2025
வனவிலங்கு நலன்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வனவிலங்கு நலனை ஊக்குவிக்கும் அதே வேளையில் விலங்குகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
வந்தாரா போன்ற ஒரு முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது எனவும், நமது கிராமங்களை பகிர்ந்து கொள்ளும் மக்களைப் பாதுகாப்பதற்கான நமது நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஒரு துடிப்பான எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.
