மீஓயா பகுதியில் விபத்துக்குள்ளான வான்: ஒருவர் உயிரிழப்பு
கல்கமுவ (Galgamuwa) - மீஓயா (Meoya) பகுதியில் யாத்திரை சென்று கொண்டிருந்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (26.5.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதெனியவில் இருந்து அனுராதபுரம் (Anuradhapura) நோக்கி பயணித்த குறித்த வான், சாரதி உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதால் மீ ஓயா பாலத்தின் மீது மோதி, வீதியை விட்டு விலகி பின்னர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக சிகிச்சை
இந்நிலையில், வானில் பயணித்தவர்களில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 13 பேர் காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
