பெறுமதி வாய்ந்த முதிரை குத்திகள் மீட்பு(Video)
முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனத்தில் இருந்து பெறுமதி வாய்ந்த முதிரை குத்திகள் பளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ரிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட முதிரை குத்திகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
ரிப்பர் வாகனத்தில் முதிரை குத்திகள் கடத்தப்படுவதாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை

குறித்த தகவலிற்கமைவாக பளை நகரில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் ரிப்பர் வாகனத்திலிருந்து முதிரை குத்திகளை மீட்டதுடன் வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட 28 முதிரை குத்திகளும் சுமார் 5 லட்சம் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவுற்றதும் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan