எரிபொருள் பற்றாக்குறையால் செயலிழக்கும் அபாயத்தில் உள்ள நோயாளர் காவு வண்டிகள்
எரிபொருள் பற்றாக்குறையினால் தற்போது நோயாளர் காவு வண்டிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சினால் அவரச நோயாளர் காவு சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 46 பென்ஸ் மற்றும் போட் ரக நோயாளர் காவு வண்டிகள் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்டிருந்தன.
இவ் நோயாளர் காவு வண்டிகளுக்கு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் படி சுப்பர் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவற்றிற்கான சுப்பர் டீசலைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை சுகாதார திணைக்களம் எதிர்கொண்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை
சில மாவட்டங்களில் குறித்த நோயாளர் காவுவண்டிகள் தற்காலிகமாக பாவனையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
