புதுக்குடியிருப்பு - வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 275 மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னதாக மங்கள வாத்திய இசையுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
மலர் வணக்கம்
மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு மூத்த உறுப்பினர் காக்கா அண்ணர் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவீரர்களின் நினைவு படத்திற்கு அன்னை அறக்கட்டளையின் உடைய பணிப்பாளர் நந்தன் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து மலர் வணக்கம் நடைபெற்றுள்ளது.
நினைவுரைகளை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உலர் உணவு பொதிகள் மற்றும் பழமரக்கன்றுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.











எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam