போராட்டம் வன்முறையாகாமல் இருப்பது அரசாங்கத்தின் பொறுப்பு - வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்கம்
ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் உள்ள தனியார் விடுதியில் காணிகளை இழந்த வலி வடக்கு உரிமையார்கள் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாம் எமது பூர்வீக நிலங்களையே மீளப்பெறும் நோக்குடன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அரசுகள் மாறினாலும் அரச பொறிமுறையிலோ அரச அதிகாரிகளின் மனோநிலையிலோ மாற்றங்கள் ஏதும் இல்லாதுள்ளது.
வன்முறை வழி
நாம் எமது நிலத்துக்காக போராடிப் போராடி சந்ததிகளை கடந்துகொண்டிருக்கின்றோம். அதனை விட ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.
எமது ஜனநாயக வழி போராட்டத்தை தொடர்ந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்குமானால் அது கடந்த காலங்கள் போன்று வன்முறை வழிமுறைக்கும் செல்லும் ஆபத்து இருக்கின்றது. இந்த மாற்றங்கள் உருவாகாது தீர்வை கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 6 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
