“இந்திய வம்சாவளிகள் வஞ்சிப்பு! 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கி தலைகுனியவேண்டும்”
மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வஞ்சிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் அந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இந்தியாவில் இருந்து வருகின்ற உதவிகளை பெற்றுக்கொள்ளும் அரசாங்கம், இந்தியாவில் இருந்து வரும் எரிபொருள் கப்பலை வரவேற்கும் அரசாங்கம், ஏன் இந்திய வம்சாவளி மக்களை மாத்திரம் வஞ்சிக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் எதிர்வரும் 24ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு வரும்போது அதனை நிறைவுக்குகொண்டு வந்து தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்று வடிவேல் சுரேஸ் கேட்டுக்கொண்டார்.



