வட்டுவாகல் பாலம் உடைவு : எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை
வட்டுவாகல் பாலம் ஊடாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது சீர்செய்யப்பட்டு பயணத்தை மேற்கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நேற்றையதினம் (15.07.2025) ஏற்பட்ட சிறு உடைவால் வாகனங்கள் குறித்த பாதையூடாக போக்குவரத்து செய்யமுடியாது இருந்தது.
வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்
உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (16.07.2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும் எனவும் அனைத்து சாரதிகளும் மற்றும் பயணிகளும் இந்த தகவலை கவனத்தில் கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, தகவல் விடுத்திருந்தது.
இந்நிலையில் பயணிகளின் போக்குவரத்து கருதி முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) பொறியியலாளர் தலைமையிலான குழுவினர் உடனடியாக குறித்த பாதையினை சீரமைப்புச்செய்து போக்குவரத்திற்காக குறித்த பாலப்பாதை ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும் என பொறியியலாளர் இதன்போது தெரிவித்திருந்தார்.
மேலதிக தகவல் - ஊகி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகர்.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam
