வவுனியாவில் 30 வயதிற்கு மேற்பட்ட 45,000 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை
வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 45000 பேருக்கு பைஸர் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த வாரம் 60 வயதுக்கு மேற்பட்ட 1000 பேருக்கு முதல் கட்டமாக சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
அதன் இரண்டாம் கட்டமாக சில தினங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட 45,000 பேருக்கு பைஸர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.
அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு வன்னி இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கேமந்த பண்டாரவின் முயற்சியால், வவுனியா சுகாதார துறையினரின் ஒத்துழைப்புடன் இவ்வாரம் 45,000 இற்கும் மேற்பட்ட பைஸர் தடுப்பூசிகள் வவுனியா மாவட்டத்திற்கு எடுத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதில் முதன்மை அடிப்படையில் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தடுப்பூசி வழங்குவதற்கான நிலையங்கள் மற்றும் திகதிகள் என்பன பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
