தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் துரிதமான நடைபெற்றுவரும் அதேவேளையில் பொதுமக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிட் தடுப்புசிகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் மட்டக்களப்பு பாரதி வீதி அருணோதயம் வித்தியாலயம்,சின்ன ஊறணி சரஸ்வதி வித்தியாலயம்,சிசிலியா பெண்கள் உயர்பாடசாலை,கல்லடி சிவானந்தா வித்தியாலயம்,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு இலட்;சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 3 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.







தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam