வவுனியாவில் பொதுமக்கள், ஆசிரியர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டது
வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா - பட்டாணிச்சூர் முஸ்லீம் மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற இருக்கிறது.
இதில் 60 வயதிற்கு மேற்பட்ட அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசியினை செலுத்தி கொண்டனர்.
இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை, மற்றும் தமிழ்மத்திய மகாவித்தியாலயம் ஆகிய நிலையங்களில் ஆசிரியர்களிற்கான தடுப்பூசிகள் இன்று காலை முதல் ஏற்றப்பட்டு வருகின்றது.
நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், வைத்தியர்கள், சுகாதார பிரிவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam